வீட்டில் புகுந்த மரநாய் பிடிபட்டது

விக்கிரமசிங்கபுரத்தில் வீட்டில் புகுந்த மரநாய் பிடிபட்டது

Update: 2021-03-10 19:22 GMT
விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் சன்னதித்தெருவை சேர்ந்தவர் பரமராஜ். இவரது வீட்டிலுள்ள மாமரத்தில் மரநாய்கள் சுற்றி திரிந்து வந்தது.  இதுகுறித்து இவர் பாபநாசம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மரநாயை பிடிப்பதற்கு கூண்டு வைத்தனர். 

அந்த கூண்டில் மரநாய் ஒன்று சிக்கியது. பிடிபட்ட மரநாயை வனத்துறையினர் பத்திரமாக வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். 

மேலும் செய்திகள்