விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

இளையான்குடி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-03-10 18:50 GMT
இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள வழக்காணி கிராமத்தை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 40). தொழிலாளி. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று இவர் எலிபேஸ்ட்ைட(விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து இளையான்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்