மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி நாமக்கல்லில் விழிப்புணர்வு ஊர்வலம்

மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி நாமக்கல்லில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2021-03-10 18:46 GMT
நாமக்கல்,

சட்டசபை தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி நேற்று நாமக்கல்லில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. நாமக்கல் நல்லிபாளையம் அரசு மேல்நிலைபள்ளியில் இருந்து இந்த ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, மாவட்ட சமூக நல அலுவலர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஊர்வலம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சாலை வழியாக பூங்கா சாலையை வந்தடைந்தது. இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச்சாவடிகளில் செய்யப்படும் வசதிகள் குறித்த துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்