கரூரில் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை
கரூரில் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை நடந்தது.;
கரூர்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனையொட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மொத்தம் 18 பறக்கும் படை குழுக்களும், 18 நிலையான கண்காணிப்புக்குழுக்களும், 4 வீடியோ கண்காணிப்புக் குழுக்களும் மற்றும் 4 கணக்கீட்டுக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. கரூர் தொகுதியில் 6 பறக்கும்படை குழுக்களும், 6 நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுக்களும் அமைக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரி ராஜவேலு தலைமையில் துணை ராணுவப் படையினர் உள்ளிட்ட குழுவினர் காந்திகிராமம் தெரசா கார்னர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அந்த வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி, தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல் கரூரில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.