மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2021-03-10 18:26 GMT
வேலாயுதம்பாளையம்
தளவாப்பாளையம் அருகே கிழக்கு தவிட்டுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனிதநீரை எடுத்து கொண்டு யாகசாலையில் வைத்தனர். பின்னர் முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கோவில் முன்பு உள்ள குறிஞ்சி மண்டப கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் மாரியம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்