துணை ராணுவத்தினர் அணிவகுப்பு

குத்தாலம், சீர்காழியில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தினர்.

Update: 2021-03-10 18:24 GMT
குத்தாலம்:
குத்தாலம், சீர்காழியில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தினர். 
குத்தாலம் 
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது அசம்பாவிதங்கள் எதும் நடக்காமல் இருக்க துணை ராணுவத்தினரை தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் துணை ராணுவத்தினர் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளனர். இந்தநிலையில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அறிவுறுத்தலின்படி மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையில் தேர்தல் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்த அணிவகுப்பு வழுவூரில் இருந்து மங்கைநல்லூர் வரை  நடைபெற்றது. இந்த அணிவகுப்பில்  பெரம்பூர் காவல் நிலைய போலீசார் மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் கலந்து கொண்டனர்.
சீர்காழி 
இதேபோல் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் கீழவீதியில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 
கொடி அணிவகுப்பை  சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தொடங்கி வைத்தார். கொடி அணிவகுப்பு ஊர்வலம் கீழவீதி, தெற்கு வீதி, கடைவீதி வழியாக வைத்தீஸ்வரன்கோவில் பஸ் நிலையத்தை வந்தடைந்தது. நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்சேதுபதி, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குமார், எல்லை பாதுகாப்பு படையினர், சீர்காழி மற்றும் வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்