சாயல்குடி,
கடலாடி அருகே கீழச்செல்வனூர் ஊராட்சி கோட்டையேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் காயாம்பூ மகன் அர்ச்சுனன் (வயது32). விவசாயியான இவர் சாயல்குடி பகுதியில் இருந்து கோட்டையேந்தல் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த டிராக்டர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த கடலாடி இன்ஸ்பெக்டர் தீபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.