சிவன்கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன்கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Update: 2021-03-10 18:17 GMT
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் அருகே நஞ்சை புகளூரில் பிரசித்தி பெற்ற மேகபாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்திபகவானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள் உள்பட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.அதனை தொடர்ந்து பல்வேறு பூக்களால்அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிவபெருமானுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் ரிஷபவாகனத்தில் சுவாமி கோவிலை சுற்றி மூன்று  முறை வலம் வந்தார். 
இதேபோல் காகிதகுடியிருப்பில் உள்ள காசிவிஸ்நாதன் கோவில், தோட்டக்குறிச்சிசொக்கநாதர் கோவில், நன்னீர் மரகதஈஸ்வரர் கோவில், மண்மங்கலம் மணிகண்டேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நொய்யல் புன்னைவன நாதர், உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் நந்தி பெருமானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், இளநீர்,  உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதேபோல் திருக்காடுதுறை மாதேஸ்வரன் உடனுறை மாதேஸ்வரி கோவில், குந்தாணி பாளையம் நத்தமேட்டு ஈஸ்வரன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. 
இதேபோல் தோகைமலை கழுகூரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நடந்த நந்திபகவானுக்கு மஞ்சள், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நந்தீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதேபோல விராச்சிலை ஈஸ்வரர் கோவில், தோகைமலை, இடையப்பட்டியில் உள்ள சிவன்கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

மேலும் செய்திகள்