கோழி வியாபாரியிடம் ரூ.1 லட்சத்து 79 ஆயிரம் பறிமுதல்
கோழி வியாபாரியிடம் ரூ.1 லட்சத்து 79 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது;
கமுதி,
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் கமுதி பகுதியில் பறக்கும் படை அதிகாரி மரகதமேரி கமுதி அருகே கீழராமநதி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது சரவண குமார் என்ற கறிக்கோழி வியாபாரியின் சரக்கு வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரி மரகத மேரி தலைமையில் அதிகாரிகள் பறிமுதல் செய்து முதுகுளத்தூர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.