தேர்தல் விதி மீறல்: அரசியல் கட்சியினர் 31 பேர் மீது வழக்கு

தேர்தல் விதி முறை மீறியதாக அரசியல் கட்சியினர் 31 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-03-10 17:22 GMT
விழுப்புரம், 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான தேதியை கடந்த மாதம் 26-ந் தேதி மாலையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததும் அன்றைய தினத்தில் இருந்தே உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. 

அதன்படி அரசியல் கட்சியினர் அனுமதியின்றி சுவர் விளம்பரம் எழுதவோ, விளம்பர பதாகைகள் வைக்கவோ, கட்சி கொடிக்கம்பம் நடவோ கூடாது என்று தேர்தல் விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் சுவர் விளம்பரம் எழுதுதல், விளம்பர பதாகை வைத்தல், கட்சி கொடிக்கம்பம் நடுதல், சாலையின் குறுக்கே கட்சி கொடிகளை தோரணங்களாக கட்டுதல் என தேர்தல் விதிமுறையை மீறியதாக இதுவரை 31 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், பாரபட்சமின்றி புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்து வருகிறோம். இந்த நடவடிக்கை தேர்தல் முடியும் வரை தொடரும் என்றனர்.

மேலும் செய்திகள்