கஞ்சா விற்றவர் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்றவர் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2021-03-10 17:06 GMT
தூத்துக்குடி, மார்ச்:
கோவில்பட்டி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன். இவருடைய மகன் வேன்பாபு (வயது 32). இவர் எட்டயபுரம் போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இதே போன்று, புதியம்புத்தூர் சிவன்கோவில் தெருவை சேர்ந்த வெயிலுகந்தன் மகன் மாரியப்பன் என்ற சூப் மாரியப்பன் (60) என்பவர் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்ததாக புதியம்புத்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி முருகேசன் நகரைச் சேர்ந்த ராமர் மகன் தங்ககுமார் (25) என்பவரை புதியம்புத்தூர் போலீசார் ஒரு கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வேன்பாபு, மாரியப்பன் என்ற சூப் மாரியப்பன், தங்ககுமார் ஆகிய 3 பேரையும் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.

மேலும் செய்திகள்