திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கோவை, திருப்பூரில் உள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 537 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 15 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 189-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 124 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 224 பேர் சிகிச்சை பலன் இன்றி பலியாகியுள்ளனர்.