மொபட் விபத்தில் வியாபாரி பலி

கோவில்பட்டி அருகே மொபட் விபத்தில் வியாபாரி பலியானார்.

Update: 2021-03-10 14:50 GMT
கோவில்பட்டி, மார்ச்:
கோவில்பட்டி இந்திரா நகரைச்சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 48). கொய்யாப்பழ வியாபாரியான இவர் நேற்று காலை மொபட்டில் கயத்தாறுக்கு சென்று கொண்டிருந்தார். கட்டாலங்குளம் விலக்கு அருகே சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே வந்த நபர் மீது மொபட் மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த ராஜேந்திரன் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்