உடன்குடி, மார்ச்:
உடன்குடி அருகே கொட்டங்காடு இசக்கியம்மன் கோவில் கொடை விழா 3 நாட்கள் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 8-ந் தேதி மாலை 6 மணிக்கு கும்பாபிஷேகம், இரவு 9 மணிக்கு அன்னதானம், நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கும், சுடலைமாட சுவாமிக்கும் சிறப்பு அலங்காரத்துடன் சாமபூஜை நடந்தது. நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, அம்மன் வீதிஉலா, பெண்கள் தொட்டில் பிள்ளை வைத்து நேமிசங்கள் படைத்தல் நடைபெற்றது. நேற்று காலையில் கொடை விழா நிறைவு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கொட்டங்காடு ஊர் மக்கள் செய்திருந்தனர்.