நாட்டறம்பள்ளியில், ஓடும் பஸ்சில் சக்கரம் கழன்று ஓடியது
நாட்டறம்பள்ளியில் ஓடும் பஸ்சில் சக்கரம் கழன்று சாலையில் ஓடியதால் பரப்பரப்பு ஏற்பட்டது.;
நாட்டறம்பள்ளி,
திருப்பத்தூர் மாவட்டம் கொத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளியை நோக்கி நேற்று காலை அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. நாட்டறம்பள்ளி சர்வீஸ் ரோட்டில் வந்தபோது, முன்சக்கரம் ஒன்று திடீரெனக் கழன்று சாலையில் ஓடியது. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் காயமின்றி தப்பினர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.