திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவில் கருட சேவை
திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவில் கருட சேவை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தை அடுத்த திருப்புட்குழி கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் குழந்தை பேறு அருளும் மரகதவல்லி தாயார் சமேத விஜயராகவ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
இதையொட்டி நேற்று விஜயராகவ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார். முக்கிய வீதிகளில் பஜனை பாடல்கள் ஒலிக்க கருடசேவை வாகனத்தில் வீதி உலா வந்தார்.
கருடசேவை விழாவை காண திருப்புட்குழி, பாலுசெட்டி சத்திரம், முசரவாக்கம், முட்டவாக்கம், தாமல், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.