சத்தியமங்கலத்தில் குழாய் உடைந்து ஆறாக ஓடிய குடிநீர்

சத்தியமங்கலத்தில் குழாய் உடைந்து குடிநீர் ஆறாக ஓடியது.

Update: 2021-03-09 22:59 GMT
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு உள்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நகராட்சி மூலமாக 3 இடங்களில் மேல்நிலை தொட்டிகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 
இந்த நிலையில் நேற்று இரவு 7.45 மணி அளவில் சத்தியமங்கலம் மணிக்கூண்டு அருகே செல்லும் குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் அந்த குழாயில் இருந்து குடிநீர் குபுகுபுவென வெளியேறி ஆறுபோல் அங்குள்ள கடைவீதியில் ஓடியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துக்கு அந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர். தகவல் தெரிந்ததும் நகராட்சி ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு கோட்டுவீராம்பாளையத்தில் உள்ள மேல்நிலை தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகத்தை நிறுத்தினர். இதனால் குடிநீர் வெளியேறுவது 8.10 மணி அளவில் நிறுத்தப்பட்டது.                 

மேலும் செய்திகள்