முன்னாள் படைவீரர்களுக்கு சிறப்பு ஆசிரியர் பணியிடம் ஒதுக்கீடு கலெக்டர் தகவல்

முன்னாள் படைவீரர்களுக்கு சிறப்பு ஆசிரியர் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என ஈரோடு மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-03-09 21:39 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு ஆசிரியர்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. கைவினை பயிற்றுவிப்பாளர், தையல் ஆசிரியர், இணை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் ஆகிய பணிகளுக்கு இந்த தேர்வு நடக்கிறது. 1,598 பணியிடங்கள் உள்ளன. இதில் முன்னாள் படைவீரர்களுக்கு 74 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. எனவே 10-ம் வகுப்புக்கு பின் பிளஸ்-2 தேர்ச்சி மற்றும் குறிப்பிட்ட சிறப்பு ஆசிரியர் பாடப்பிரிவில் பட்டய படிப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தகுதியான முன்னாள் படைவீரர்கள் வருகிற 25-ந் தேதிக்குள் https://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய மேலும் விவரங்களை ஈரோடு காந்திஜி ரோடு ஜவான்ஸ் பவன் கட்டிடத்தில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பித்தவர்கள் மேற்கண்ட முகவரியில் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் சி.கதிரவன் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்