உரிய ஆவணங்கள் இல்லாததால் வியாபாரி, டிரைவர்களிடம் ரூ.2.93 லட்சம் பறிமுதல்
உரிய ஆவணங்கள் இல்லாததால் வியாபாரி, டிரைவர்களிடம் ரூ.2.93 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
முசிறி,
உரிய ஆவணங்கள் இல்லாததால் வியாபாரி, டிரைவர்களிடம் ரூ.2.93 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
லாரி டிரைவர்
தொட்டியம் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பன்னீர்செல்வம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் தொட்டியம் மாதாகோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதில் சேலம் அயோத்தியாபட்டினத்தை சேர்ந்த டிரைவர் சவுந்தர்ராஜன் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்தை எடுத்துச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தக்காளி வியாபாரி
இதேபோல் தேர்தல் பறக்கும்படை அலுவலர் சரண்யா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆசைதம்பி ஆகியோர் திருச்சி-நாமக்கல் சாலையில் தொட்டியம் அருகே ஏழூர்பட்டி என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே லாரிகளை மறித்து சோதனை செய்தனர். அப்போது லாரியில் வந்த கர்நாடகா மாநிலம் கோனார் மாவட்டத்தை சேர்ந்த ரவீந்திரன், ராமநாதபுரத்தில் தக்காளிகளை விற்றுவிட்டு, ரூ.80 ஆயிரத்துடன் கர்நாடகா செல்வதாக கூறினார்.
மற்றொரு லாரியில் கர்நாடகாவை சேர்ந்த டிரைவர் வினோத் புதுக்கோட்டையில் தக்காளிகளை விற்றுவிட்டு ரூ.1 லட்சத்துடன் கர்நாடகா செல்வதாக கூறினார். ஆனால் இருவரிடமும் உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் அந்த பணமும் பறிமுதல் செய்யபட்டது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 லட்சத்து 93 ஆயிரம் முசிறி தாசில்தார் சந்திரதேவநாதன், துணைதாசில்தார் லதா ஆகியோர் முன்னிலையில் முசிறி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் தேர்தல் பறக்கும்படை போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 100 மூட்டை அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.