ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே உள்ள நதிக்குடி கிராமத்தில் சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு எந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து பொது மக்களுக்கு செயல்முறை விளக்க முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். முகாமில் வெம்பக்கோட்டை தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் சசிகலா, ஆலங்குளம் வருவாய் ஆய்வாளர் பொன்மாரியப்பன், நதிக்குடி கிராம நிர்வாக அலுவலர் வெள்ளை பாண்டியன், கிராம உதவியாளர் முருகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.