மாணவிகளுக்கு பயிற்சி

மாணவிகளுக்கு பயிற்சி;

Update: 2021-03-09 20:37 GMT
காரியாபட்டி, 
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 4-ம் ஆண்டு வேளாண்மை பட்டப்படிப்பு மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத்திற்காக காரியாபட்டி வருவாய் கிராமங்களில் பணி அனுபவம் மற்றும் பயிற்சிகளை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு காரியாபட்டி வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராணி தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தார். அப்போது விவசாயத்தின் தொழில்நுட்பங்கள் குறித்து மாணவிகள் விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். அப்போது எஸ்.மறைக்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமரின் வயலில் பயிரிடப்பட்டிருக்கும் நிலக்கடலை செடிகளுக்கு ஜிப்சம் இடும் முறையை நேரில் கண்டு மாணவிகள் பயிற்சி பெற்றனர். இதில் மாணவிகள் வித்யா, அன்புபாரதி, தனசேகரி, கவிதா, நந்தினி, வர்ணிஷா ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்