பாளையங்கோட்டை, அம்பையில் போலீஸ், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
பாளையங்கோட்டை, அம்பையில் போலீஸ், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
அம்பை:
பாளையங்கோட்டை, அம்பையில் போலீஸ், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
கொடி அணிவகுப்பு
சட்டமன்ற தேர்தலில் பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் நெல்லை மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் கொடி அணிவகுப்பு நடந்து வருகிறது.
இந்த நிலையில் போலீசார் சிறப்புக் காவல் படையினர் மற்றும் துணை ராணுவத்தினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு பாளையங்கோட்டை மகராஜநகரில் இருந்து தொடங்கியது. பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் ஜான் பிரிட்டோ தலைமை தாங்கினார்.
இந்த கொடி அணிவகுப்பு ஐகிரவுண்டு ரோடு, போலீஸ் கமிஷனர் அலுவலகம் சாலை, உழவர் சந்தை வழியாக மகராஜநகர் ரெயல்வே கேட் பகுதியில் நிறைவடைந்தது. இதில் உதவி ஆணையாளர் (ஆயுதப்படை) முத்தரசு, இன்ஸ்பெக்டர்கள் ஆடிவேலு, பத்மநாபன், மனோகரன், சிறப்பு காவல் படையினர் மற்றும் துணை ராணுவத்தினர் கலந்து கொண்டனர்.
அம்பை
இதேபோல் அம்பையில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். கிருஷ்ணன் கோவில் திடலில் இருந்து புறப்பட்ட இந்த அணிவகுப்பை அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் தொடங்கி வைத்தார்.
இதில் 50 போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் 60 பேர் கலந்து கொண்டனர். அணிவகுப்பானது அம்பை மெயின் ரோடு வழியாக சென்று கல்யாணி திரையரங்கம் எதிரில் நிறைவு பெற்றது.