கோவில்பட்டி புற்றுக்கோவிலில் சிறப்பு பூஜை
கோவில்பட்டி புற்றுக்கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி கோவில் நடை திறக்கப்பட்டு, கணபதி பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலபைரவருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.
விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சமூக இடைவெளி பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.