ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில் பங்குனி தேர்த்திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது

ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில் பங்குனி தேர்த்திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது

Update: 2021-03-05 22:20 GMT
ஸ்ரீரங்கம்,
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி மண்டல பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 16-ந் தேதி நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள் தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். வருகிற 30-ந்தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். ஏப்ரல் 1-ந் தேதியுடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்