தோகைமலையில் போலீசார் கொடி அணி வகுப்பு

தோகைமலையில் துணை ராணுவம், போலீசார் கொடி அணி வகுப்பு நடைபெற்றது.

Update: 2021-03-05 18:53 GMT
தோகைமலை
குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோகைமலையில் நேற்று மாவட்ட காவல் துறை சார்பில் துணை ராணுவம், போலீசார் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. இதனை மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தோகைமலை பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய கொடி அணி வகுப்பு முக்கிய வீதிகள் வழியாக சென்று தோகைமலை போலீஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன், பாலவிடுதி, சிந்தாமணிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்