சத்தியமங்கலம் அருகே நாட்டுத்துப்பாக்கி-மான் இறைச்சி வைத்திருந்த 4 பேர் கைது

சத்தியமங்கலம் அருகே நாட்டுத்துப்பாக்கி-மான் இறைச்சி வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

Update: 2021-03-03 20:40 GMT
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே நாட்டுத்துப்பாக்கி-மான் இறைச்சி வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 
மான் இறைச்சி
சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு உள்பட்ட புளியங்கோம்பை மற்று பிக்ரிபாளையம் பகுதிகளில் சிலர் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாகவும், மான் வேட்டையில் ஈடுபடுவதாகவும் நக்சல் தடுப்பு தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நக்சல் தடுப்பு தனிப்பிரிவு போலீசார் புளியங்கோம்பை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். மேலும் சில வீடுகளில் சோதனை நடத்தினார்கள். அப்போது மீசை மணி (வயது 45), தீபன் (50) என்ற 2 பேர் வீடுகளில் மான் இறைச்சி 5 கிலோ, 6 மான் கால்கள், சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் பேரல், மான் வேட்டையாட பயன்படுத்தும் கம்பிகள், நாட்டு வெடி ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்தார்கள். 
விசாரணை
இதேபோல் புளியங்கோம்பை கிராமத்தில் சோதனை செய்தபோது, மாரிசாமி (26), பெரியசாமி (55) ஆகியோர் வீடுகளில் இருந்து 2 நாட்டுத்துப்பாக்கிகளும் கண்டுபிடிக்கப்பட்டது.
 இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரையும் நக்சல் தடுப்பு தனிப்பிரிவு போலீசார் கைது செய்தார்கள். 
கைது செய்யப்பட்ட 4 பேரையும் நக்சல் தடுப்பு தனிப்பிரிவு போலீசார் சத்தியமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தார்கள். 
இவர்கள் 4 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்