நெய்வேலி அருகே மினிலாரி மோதி குழந்தை பலி

நெய்வேலி அருகே மினிலாரி மோதி குழந்தை உயிாிழந்தது.

Update: 2021-03-03 20:39 GMT
நெய்வேலி, 
கடலூா் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள மேல் வடக்குத்து தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது 1½ வயது ஆண் குழந்தை செந்தமிழ் செல்வன் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தது. 

அப்போது அந்த வழியாக காய்கறிகளை ஏற்றி விற்பனை செய்து வந்த மினிலாரி குழந்தை மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குழந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்