போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-03-03 20:21 GMT
வள்ளியூர், மார்ச்:
பணகுடி அருகே பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

பள்ளி மாணவி கடத்தல்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடலிவிளை புதூரை சேர்ந்த மணி மகன் ஸ்டீபன் (வயது 26). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருடன் நெருக்கமாக பேசி பழகி வந்துள்ளார்.  இந்நிலையில் கடந்த மாதம் 12-ம்தேதி அந்த மாணவியிடம் ஸ்டீபன் ஆசைவார்த்தை கூறி வெளியூருக்கு கடத்தி சென்று பாலியியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

தொழிலாளி கைது

போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 
இந்நிலையில் ஸ்டீபன் மாணவியுடன் ஊருக்குள் வந்து வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காயத்ரி மற்றும் போலீசார் அங்கு சென்று ஸ்டீபனை கைது செய்து பள்ளி மாணவியை மீட்டனர். மீட்கப்பட்ட மாணவி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நெல்லையில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு, கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. 
பள்ளி மாணவியை கடத்தி சென்ற ஸ்டீபனுக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் ஆகி, 3 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்