காரில் கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்

காரில் கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்

Update: 2021-03-03 19:48 GMT
விருதுநகர்,
விருதுநகர்-சிவகாசி ரோட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே கதர் கிராம தொழில் துறை ஆய்வாளர் தேவராஜன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகனசோதனைமேற்கொண்டபோது அந்த வழியாக வந்த ஒரு காரில் ரூ. 1 லட்சம் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் இருந்தது. காரில் இருந்த பட்டம்புதூரைச்சேர்ந்த சேர்ந்த சதர்ம சாதனா (வயது 35) என்பவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் தனது நிறுவனத்தின் கிளை ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்ட நத்தத்தில் உள்ளதாகவும், ஊழியர்களுக்கு சம்பள பட்டுவாடா செய்ய பணம் கொண்டு செல்வதாகவும் தெரிவித்தாா்.  ஆனாலும் ஆவணங்கள் இல்லாத நிலையில் பறக்கும் படையினர் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்