காரில் டாக்டர் கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்
பெரம்பலூரில், உரிய ஆவணம் இன்றி காரில் டாக்டர் கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர்
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம், பரிசு பொருட்கள் ஏதேனும் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தேர்தல் பறக்கும் படையினரும், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக பிரிவு சாலை அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரன் தலைமையிலான தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் ரூ.1 லட்சம் இருந்தது. இதுகுறித்து தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா பி.கே.அகரம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த டாக்டர் செந்தில் என்பது தெரியவந்தது.
ஆனால், பணம் கொண்டு செல்வதற்கான ஆவணம் எதுவும் அவரிடம் இல்லை என்பது ெதரியவந்தது. அதன்பேரில், அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு பெரம்பலூர் வருவாய் கோட்ட சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் சத்தியமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.