அரவக்குறிச்சியில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு

அரவக்குறிச்சியில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.;

Update: 2021-03-03 19:16 GMT
அரவக்குறிச்சி
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது, இதனையொட்டி கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் அரவக்குறிச்சியில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் கொடி அணிவகுப்பை தொடங்கிவைத்து தலைமை ஏற்று வழிநடத்தி சென்றார். கொடி அணிவகுப்பு அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் தொடங்கிய மெயின் ரோடு வழியாக சென்று சந்தைப்பேட்டை வரை சென்றது. இதேபோன்று பள்ளப்பட்டியிலும் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் கரூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், அரவக்குறிச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்