தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை

தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை நடத்தினர்.

Update: 2021-03-03 19:15 GMT
அரவக்குறிச்சி
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்தநிலையில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வேலன்செட்டியூர் சுங்கச்சாவடி அருகே தேர்தல் நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் சரவணன் தலைமையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல், ஏட்டுகள் நந்தகுமார், முகம்மது அப்பாஸ் மற்றும் பணியாளர்கள் அந்த வழியாக வந்த வேன்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர். மேலும், வாகனங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம், நகை மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்றும் முழு சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்