வால்பாறை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்த இடம் ஒதுக்கீடு
வால்பாறை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்த இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி,
சட்டமன்ற தேர்தலுக்காக வால்பாறை தொகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், தெருமுனை, பிரசாரம், கூட்டம் நடத்துவதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து வால்பாறை சரக போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் கூறியதாவது:-
மிக முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது ஆனைமலை முக்கோணத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று ஆனைமலை போலீஸ் நிலைய பகுதியில் ஆனைமலை முக்கோணம், வேட்டைக்காரன்புதூர் மோடிமேடு, கோட்டூர் போலீஸ் நிலைய பகுதியில் குமரன்கட்டம், ஆழியாறு போலீஸ் நிலைய பகுதி.
அங்கலகுறிச்சி, நா.மூ.சுங்கம் சந்திப்பு, வால்பாறை போலீஸ் நிலைய பகுதியில் அண்ணா திடல், ஸ்டேன்மோர் சந்திப்பு, முடீஸ் போலீஸ் நிலைய பகுதியில் முடீஸ் சந்திப்பு.
காடம்பாறை போலீஸ் நிலைய பகுதியில் அட்டகட்டி, ஷேக்கல்முடி போலீஸ் நிலைய பகுதியில் சோலையார் அணை ஆகிய பகுதிகளில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள் நடத்தி கொள்ளலாம்.
அம்பராம்பாளையம், அம்பராம்பாளையம் சந்திப்பு, ஆத்துப்பொள்ளாச்சி, காளியப்பகவுண்டன்புதூர், சேத்துமடை, வேட்டைக்காரன்புதூர் காளியாபுரம், திவான்சாபுதூர், கணபதிபாளையம்,.
கோட்டூர் நகரம், குமரன் கட்டம், சோமந்துறைசித்தூர், சமத்தூர், பொங்காளியூர், வஞ்சியாபுரம் பிரிவு, ஆவல் சின்னாம்பாளையம், பில் சின்னாம்பாளையம், கரியாஞ்செட்டிபாளையம்.
தொண்டாமுத்தூர், கரட்டுபாளையம், ஆழியாறு, அங்கலகுறிச்சி, நா.மூ.சுங்கம், மஞ்சநாயக்கனூர், ரெட்டியார்மடம், வால்பாறை நகரம், ஸ்டேன்மோர், சிறுகுன்றா எஸ்டேட், கருமலை எஸ்டேட், சின்கோனா, அக்காமலை.
தாய்முடி, தோணிமுடி, முத்துமுடி, முடீஸ் நகரம், ஹைபாரஸ், அட்டகட்டி, வாட்டர்பால்ஸ் எஸ்டேட், சோலையார் டேம், பன்னிமேடு, கல்யாணபந்தல், உருளிக்கல், மானாம்பள்ளி ஆகிய இடங்களில் தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறும் அரசியல் கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.