வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
மயிலாடுதுறையில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்கி, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அப்போது, ‘வாக்கு என் உரிமை, அனைவரும் வாக்களிக்க வேண்டும், ஜனநாயகம் காக்க வேண்டும்‘ என்ற தலைப்பில் வைக்கப்பட்டிருந்த பலகையில் மாவட்ட வருவாய் அலுவலர் கையெழுத்திட்டார். அப்போது அவர் கூறுகையில், வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி இந்த வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனும் அவசியம் வாக்களிக்க வேண்டும். வாக்கு என்பது நமக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமை. எனவே வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை காப்பாற்றுவோம் என்றார்.
நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் பாலாஜி, மகளிர் உதவி திட்ட அலுவலர் சவுந்தரராஜன், தாசில்தார் பிரான்சுவா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சீர்காழி
சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் நாராயணன் தலைமை தாங்கினார். தாசில்தார் ஹரிஹரன் முன்னிலை வகித்தார். மகளிர் திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் தேர்தல் விழிப்புணர்வு குறித்த கையெழுத்து டங்கி வைத்து பேசுகையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்குகளை விற்பனை செய்யக்கூடாது என்றார்.
செம்பனார்கோவில்
இதேபோல் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கான கையெழுத்து இயக்கம் செம்பனார்கோவில் கடைவீதியில் நடைபெற்றது. இதில் பூம்புகார் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், தனித்துணை கலெக்டருமான வாசுதேவன் கலந்து கொண்டு, முதல் கையெழுத்திட்டு, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.