கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பற்றியது
கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பற்றியது
ராமேசுவரம்,மார்ச்
பாம்பன் லைட் ஹவுஸ் தெருவைச் சேர்ந்த பிரவீனா என்ற பெண் கியாஸ் அடுப்பை பற்ற வைத்து சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் குடிசை வீடு முழுவதும் தீப்பிடித்து மளமளவென எரிந்தது. பக்கத்து வீட்டுக்கும் தீ பரவி அந்த வீடும் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம், 5 பவுன் நகை உள்பட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாயின. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாரும் பொதுமக்கள் உதவியுடன் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதுகுறித்து பாம்பன் போலீசார் வழக்கு பதிவு செய்து கியாஸ் சிலிண்டர் வெடித்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.