மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் கைது
மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் கைது
கீழக்கரை,மார்ச்.
கீழக்கரை அருகே புதுமாயாகுளத்தைச் சேர்ந்தவர் பழனி முருகன் (வயது 32). கூலி தொழிலாளியான இவருக்கும் அதே ஊரை சேர்ந்த அவரது உறவினரான சாந்தி பிரியாவிற்கும் (26) கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பழனி முருகன் அரிவாளால் சாந்தி பிரியாவை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த சாந்திப்பிரியா சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றிய புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனி முருகனை கைது செய்தனர்.