வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
எஸ்.புதூர், மார்ச்
எஸ்.புதூர் அருகே உள்ள கட்டுகுடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன். சம்பவத்தன்று இவருடைய வீட்டிற்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்தினரை அழைத்து பாம்பை பிடிக்க முயன்றார். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உலகம்பட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் அங்கு சென்று வீட்டிற்குள் புகுந்த சுமார் 4 அடி நீளமுள்ள பாம்பை லாவகமாக பிடித்து அருகிலுள்ள மேலவண்ணாரிருப்பு மலைப்பகுதியில் விட்டார்.