வீட்டில் கருப்பு கொடி கட்டியவர் மீது வழக்கு
வீட்டில் கருப்பு கொடி கட்டியவர் மீது வழக்கு
திருப்புவனம்,மார்ச்
திருப்புவனம் கீழப்பூவந்தி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் பசும்பொன் தேசிய கழகத்தின் சிவகங்கை மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட கோரியும், சிவகங்கையில் மருதுபாண்டியர்கள் சிலை வைக்க கோரியும், தனது வீட்டின் முன்புறமும், பின்புறமும், அருகில் உள்ள மின் கம்பத்திலும் கருப்புக்கொடி கட்டி உள்ளார். இச்சம்பவம் குறித்து பூவந்தி கிராம நிர்வாக அலுவலர் முருகன் பூவந்தி போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.