பந்தலூர், கூடலூர் தாலுகாக்களில் தேர்தல் பணிக்கு செல்லும் 480 பேருக்கு கொரோனா தடுப்பூசி

பந்தலூர், கூடலூர் தாலுகாக்களில் தேர்தல் பணிக்கு செல்லும் 480 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2021-03-03 18:41 GMT
பந்தலூர்

பந்தலூர் தாலுகா உப்பட்டி அருகே புஞ்சைவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டமன்ற தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. 

இதற்கு வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமை தாங்கினார். தொடர்ந்து தேர்தல் பணிக்கு செல்பவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதேபோல கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, கப்பாலா, சேரம்பாடி, அம்பலமூலா, நெலாக்கோட்டை மற்றும் கூடலூர் தாலுகா பகுதியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்பட்டது. 

 இதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 480 பேருக்கும், பொதுமக்கள் 100 பேருக்கும் என மொத்தம் 580 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 

மேலும் செய்திகள்