மண்டைக்காடு கோவிலில் ரூ.5 லட்சம் வசூல்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.5 லட்சம் வசூலானது.
மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.5 லட்சம் வசூலானது.
உண்டியல் திறப்பு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவிற்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவிலின் முன்பு கடந்த 16-ந் தேதி முதல் திறந்த வார்ப்பு மற்றும் தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டிருந்தது.
இந்த உண்டியல் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், ஆய்வாளர் கோபாலன், பத்மநாபபுரம் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் செந்தில்குமார், கோவில் மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் கோவில் ஊழியர்கள், பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.
நகை, பணம் காணிக்கை
இதில் ரொக்கமாக ரூ.4 லட்சத்து 92 ஆயிரத்து 132 மற்றும் தங்கம் 2 கிராம், வெள்ளி 35 கிராம் ஆகியன காணிக்கையாக கிடைக்கப்பெற்றன.