அவினாசி அருகே வீட்டில் படுத்திருந்த சிறுமியின் காதை கடித்த வெறிநாய்

அவினாசி அருகே சிறுமியின்காதை கடித்த வெறிநாய் பொதுமக்கள் அடித்து கொல்ல முயன்றபோது தப்பி ஓடியது.

Update: 2021-03-03 17:00 GMT
அவினாசி
அவினாசி அருகே சிறுமியின்காதை கடித்த வெறிநாய் பொதுமக்கள் அடித்து கொல்ல முயன்றபோது தப்பி ஓடியது.
வெறிநாய்
அவினாசி அருகே உள்ள  ராயம்பாளையத்தை சேர்ந்தவர்  ஜார்ஜ் கோமகன். இவருடைய மகள் சுவேதா (வயது 10). இந்த நிலையில் ஜார்ஜ் கோமகன் நேற்று தோட்டத்து வேலைக்கு சென்றுவிட்டார். உடல் நலம் சரியில்லாமல் சுவேதா வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள். அப்போது திடீரென வீட்டுக்குள் புகுந்து வெறிநாய் ஒன்று சுவேதாவின் காதை கடித்துள்ளது. வலி தாங்க முடியாமல் சுவேதா சத்தம் போட்டுள்ளார். 
அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்வந்து பார்த்தபோது வீட்டிற்குள் இருந்த வெறிநாய் வெளியே ஓடியது. இருப்பினும் பொதுமக்கள் சிலர் கம்புகளுடன் நாயை துரத்தி அடித்து கொல்ல முயற்சித்தனர். அந்த நாய் யாருக்கும் சிக்காமல் காட்டுப்பகுதியில் தப்பி ஓடியது. 
சிகிச்சை 
இதேபோல் ராயம்பாளையத்தில் வேறு சிலரையும் அந்த வெறிநாய் கடித்துள்ளதாக கூறப்படுகிறது. வெறிநாய்கடித்து காயமடைந்த சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்