2 பேரை அரிவாளால் வெட்டியவர் கைது

2 பேரை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-03-03 16:52 GMT
பேரையூர், 
பேரையூர் அருகே உள்ளது ராவுத்தன்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 65). இவர் விவசாயியான இவர் அங்குள்ள ஊருணிக்கு நடந்து சென்றார். அப்போது அவரை அதே ஊரைச் சேர்ந்த ராம கிருஷ்ணன் (41) என்பவர் வழிமறித்து உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி விட்டு  தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயமடைந்த ராஜாராம் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். முன்னதாக ராமகிருஷ்ணன் ராவுத்தன்பட்டி அருகில் உள்ள எஸ.கண்ணாபட்டி கிராமத்துக்குச் சென்று அங்கு குடியிருக்கும் மகாலிங்கம் என்பவரையும் அரிவாளால் வெட்டிஉள்ளார். இதில் படுகாயம் அடைந்த மகாலிங்கம் பேரையூர் அரசு மருத்துவ மனையில்  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்