ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் தெப்பத்திருவிழா
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது.;
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 25-ந் தேதி கருட சேவையும், 1-ந் தேதி தேரோட்டமும் நடந்தது.
நேற்று முன்தினம் தெப்பத் திருவிழா நடந்தது. இதில் பெருமாள் தாயாருடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
2-வது நாளாக தெப்பத்திருவிழா நடந்தது. இதில் நம்மாழ்வார் மற்றும் ஆச்சாரியர்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், ஆழ்வார்திருநகரி ரங்க ராமானுஜ ஜீயர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.