சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடகத்துக்கு நேற்று அதிகாைல 4 மணியளவில் ெரயிலில் ரேஷன் அரிசி கடத்தப்பட இருப்பதாக நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்ேபாில் வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் தலைமையில் வருவாய்த்துறையினர் 2 மோட்டார்சைக்கிள்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலைய நடைமேைட ஓரம் பதுக்கி வைத்திருந்த 3 டன் எடையிலான 70 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, ஒரு மினிேவனில் ஏற்றி நாட்டறம்பள்ளி தாசில்தார் அலுவலகத்துக்குக் ெகாண்டு சென்றனர்.
அதிகாரிகளை பார்த்ததும் கடத்தல்காரர்கள் அங்கிருந்து வெளியேறி ரெயில் நிலையம் அருகில் வெளியே நிறுத்தப்பட்டு இருந்த அதிகாரிகள் வந்த ஒரு மோட்டார்சைக்கிளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றனர். அதிகாரிகள் திரும்பி வந்து பார்த்தபோது, மோட்டார்சைக்கிள் சேதப்படுத்தப்பட்டு இருந்ததை மீட்டு பழுதுப் பார்க்க கொண்டு சென்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.