ஆரணியில்துணை ராணுவப்படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடந்தது
ஆரணியில்துணை ராணுவப்படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடந்தது
ஆரணி
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்் தேதி நடக்கிறது. தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணிவப்படை வீரர்கள் வந்துள்ளனர். தேர்தல் அமைதியான முறையில் அமைதியாக நடக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் துணை ராணுவப்படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். ஆரணியில் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
ஆரணி டவுன் போலீஸ்நிலையத்தில் இருந்து தொடங்கி கோட்டை வீதி, மார்க்கெட் ரோடு, காந்தி ரோடு, கார்த்திகேயன் ரோடு, நகராட்சி சாலை வழியாக சென்று மீண்டும் டவுன் போலீஸ்நிலையத்தில் முடிவடைந்தது. எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, சசிகுமார், முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை கமாண்டர் அசோக்குமார் கலந்துகொண்டனர்.