கயத்தாறு அருகே காளியம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்
கயத்தாறு அருகே காளியம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள மானங்காத்தான் கிராமத்தில் காளியம்மன் கோவில் கொடை விழா நடந்தது. இதை முன்னிட்டு மதிய கொடை, மாலையில் தீர்த்தவாரி, இரவில் புனித தீர்த்தம் எடுத்து வருதல் நடைபெற்றது.
தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம், அக்னி சட்டி, பால்குடம் ஊர்வலம், மாவிளக்கு உள்ளிட்டவைகள் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து ரதவீதிகள் வழியாக சென்றனர். நள்ளிரவில் சாமக்கொடை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.