உத்தனப்பள்ளியில் லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது
லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது
ராயக்கோட்டை:
ராயக்கோட்டையை அடுத்த உத்தனப்பள்ளி போலீசார் டி.குருபரப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் இருந்த மரத்தின் அடியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியை சேர்ந்த மகேஷ் (வயது 30) என்பதும், உத்தனப்பள்ளி பகுதியில் தங்கியிருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் 6 லாட்டரி சீட்டுகள் மற்றும் 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.