ஏரியூர் அருகே மர்ம விலங்கு கடித்து 15 ஆடுகள் செத்தன
ஏரியூர் அருகே மர்ம விலங்கு கடித்து 15 ஆடுகள் செத்தன.;
ஏரியூர்,
ஏரியூர் அருகே உள்ள பத்திரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஆரல்குந்தி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 50). இவர் 15-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு சிறிது தொலைவில் உள்ள தனது குடிசை வீட்டில் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை சென்று பார்த்தபோது 15 ஆடுகள் மர்மமான முறையில் உடல்கள் கிழிக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் செத்து கிடந்தன. மர்ம விலங்கு கடித்து செத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கோவிந்தன் இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் அளித்தார். தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கால்நடை மருத்துவரும் வந்து பார்வையிட்டார்.