சாத்தூர்,
சாத்தூைர அடுத்த படந்தாலில் உள்ள சக்திமாரியம்மன் கோவிலில் மாசி மாத செவ்வாய்க்கிழமையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு பால், பன்னீர், தேன், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள், இளநீர் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.