வண்ண புகைப்படத்துடன் வாக்காளர் அடையாள அட்டை
வண்ண புகைப்படத்துடன் வாக்காளர் அடையாள அட்டை
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களிடம் இருந்து நேரிலும் மற்றும் ஆன்லைன் மூலமாக பெயர் திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்பட மாற்றம் ஆகியவற்றிற்கான படிவங்கள் பெறப்பட்டுள்ளன. இதனை அந்த வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆய்வு செய்து தகுதியின் அடிப்படையில் மேற்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் 20-ந் தேதி வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் நகல், வாக்காளர் வண்ண புகைப்பட அடையாள அட்டை பெற தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள தாலுகா அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தை அணுகி ரூ.25 கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.